search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரை முருகன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளைய அருணா அப்பொறுப்பில் இருந்து விடுவிப்பு.
    • 2 மாவட்ட தி.மு.க. செயலாளர்களை மாற்றம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

    சென்னை:

    தி.மு.க.வில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிவிப்பில் துரை முருகன் கூறியிருப்பதாவது:-

    சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளைய அருணா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஜெகதீஷனும் நியமிக்கப்படுகிறார்கள்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
    • கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 5-ந்தேதி காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

    அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    திமுக தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், இன்று ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். #DMK #Karunanidhi #MKStalin
    சென்னை:

    திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். தலைவர் பதவிக்கு மு.க ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிடுகின்றனர்.

    இன்று வேட்புமனு தாக்கல் செய்வதை ஒட்டி காலை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு வந்த மு.க ஸ்டாலின், வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். அதேபோல, துரை முருகனும் தனது வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்தினார். 

    இதனை அடுத்து, அவர்கள் அண்ணா அறிவாலயம் வந்த அவர்கள் வேட்புமனுவை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் தாக்கல் செய்தனர். ஸ்டாலினை 65 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிந்துள்ளனர்.

    எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். 
    சட்டசபையில் இன்று கூட்டுறவுத்துறை மீதான விவாதத்தில் செல்லூர் ராஜூ சப்தமாக உரையை வாசிக்க, அதனை துரை முருகன் கிண்டல் செய்ய, அதற்கு ஜெயக்குமார் அளித்த பதில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவுத்துறை மீதான விவாதம் நடந்தது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தனது உரையை சப்தமாக வாசித்தார். இதனை கிண்டலடிக்கும் விதமாக பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரை முருகன், ‘மாடத்தில் செல்லூர் ராஜூவின் மனைவி, இவரது பேச்சை கேட்டு வீட்டில் பூனையாகவும் இங்கு புலி போல் இருப்பதாகவும் கூறினார்’ என பேசினார்.

    இதனை அடுத்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “மாடத்தில் உள்ள அமைச்சரின் துணைவியாருக்கு அவர் மேலுள்ள மரியாதையை பார்த்தால், மாடத்திலே கன்னி மாடத்திலே என பாட தோன்றுகிறது. அமைச்சர் செல்லூர் ராஜூ உதாரண புருசராகவும், மனைவியே கண் கண்ட தெய்வமாகவும், அனைவருக்கும் உதாரணமாகவும் உள்ளார்’ என கூறினார். இதனால், அவையில் சில நிமிடங்கள் சிரிப்பலை ஏற்பட்டது. 
    ×